ADDED : நவ 05, 2025 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறில் அரசு மேல் நிலைப் பள்ளியில் உப கல்வி மாவட்ட அளவிலான கலை விழா நேற்று துவங்கியது.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பவ்யா கண்ணன் தலைமை வகித்தார். தேவிகுளம் ஊராட்சித் தலைவர் மின்சி ரோபின்சன் துவக்கி வைத்தார். அரசு தொழில் பயிற்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி, மூணாறு கல்வித்துறை அதிகாரி சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கலை விழாவில் 65 பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். கலை விழா இன்று (நவ.5ல்) நிறைவு பெற உள்ளது.

