ADDED : ஏப் 09, 2025 06:09 AM
அ நிறம் | அளவு
கூடலுார் : கருநாக்கமுத்தன்பட்டி அரசு கள்ளர் துவக்கப்பள்ளி நூற்றாண்டு விழா வட்டாரக் கல்வி அலுவலர் சாந்தி தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியை குட்டியம்மாள் ஆனந்தி வரவேற்றார்.
விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் பரிசு வழங்கினார். கல்வி அலுவலர் மகாலட்சுமி, வள மைய பயிற்றுநர் சுகாசினி, ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
