ADDED : செப் 11, 2026 03:51 PM
தேனி, செப்.12–பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு பணிகள் இன்று துவங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளை ஒருங்கிணைக்கவும், தேவையான மேம்பாட்டு பணிகளை செய்திடவும் பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவில் 24 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். அதில் தலைமை ஆசிரியர்கள், இரு ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தவிர 18 உறுப்பினர்களில் பெற்றோர், முன்னாள் மாணவர்கள் இடம் பெறுவார்கள். இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த குழு மாற்றி அமைக்கப்படும். புதிய உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். 2024ல் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவி காலம் கடந்த ஆக.,ல் முடிவடைந்தது. இதனால் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யும் பணி நாளை துவங்குகிறது. இன்று 158 தொடக்கப்பள்ளிகளிலும், செப்., 19ல் 161 தொடக்கப்பள்ளிகளிலும், செப்.,26ல் 99 நடுநிலைப்பள்ளிகளிலும், அக்.,10ல் 107 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் குழு மறு கட்டமைப்பு செய்யப்படுகிறது.
