ADDED : ஜூன் 03, 2026 11:44 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் தெற்குபுதுத்தெரு பாண்டியன். இவரது மகன் ரத்தினேஷ்பாண்டி 13. தனியார் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார்.
அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது வாகம்புளி தெரு உமர்பாரூக் 34, ஓட்டி வந்த கார் ரத்தினேஷ் பாண்டி மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த மாணவரை பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். விபத்து பற்றி தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.-
