/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில நீச்சல் போட்டிக்கு பள்ளி மாணவர் தேர்வு
/
மாநில நீச்சல் போட்டிக்கு பள்ளி மாணவர் தேர்வு
ADDED : ஆக 23, 2025 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : வருவாய் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி தேனி விளையாட்டு மேம்பாட்டு கழக நீச்சல் குளத்தில் நடந்தது.
இதில் கூடலுார் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஜனாத், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 50 மீ., 100 மீ., 200 மீ., ஆகிய 3 பிரிவுகளிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். இவர் மாநில அளவில் நடக்கும் நீச்சல் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மாணவனுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி செயலாளர் மூர்த்திராஜன், தலைமை ஆசிரியர் அதிபர், உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயபாண்டியன் பாராட்டினர்.