ADDED : ஜன 21, 2024 05:13 AM
அ நிறம் | அளவு
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துவேல் மகன் கணேஷ் புஷ்பராஜ் 15, கடமலைகுண்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார்.
சில மாதங்களாக கணேஷ்புஷ்பராஜ் வீட்டில் யாரிடமும் பேசாமல் தனிமையிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மேலப்பட்டியில் உள்ள தோட்டத்திற்குச் சென்ற கணேஷ் புஷ்பராஜ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றினார்.
பலத்த தீக்காயங்களுடன் இருந்தவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவம் குறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
