/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜூடோவில் தங்கம் வென்ற பள்ளி மாணவர்
/
ஜூடோவில் தங்கம் வென்ற பள்ளி மாணவர்
ADDED : அக் 18, 2025 04:25 AM

கம்பம்: சென்னையில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கம்பம் ஆர்.ஆர். பள்ளி மாணவர் யோகித் சர்மா தங்கம் வென்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார்.
கம்பம் ஆர்.ஆர். இன்டர்நேசனல் பள்ளி மாணவர் யோகித் சர்மா, இவர் சென்னையில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் ஜூடோ போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பிரிவு, 73 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்கம் வென்றார். சாதனை படைத்த மாணவருக்கு தங்கப் பதக்கம், ் ரொக்கம் ரூ. ஒரு லட்சம் வழங்கப்பட்டது. அடுத்தாண்டு லக்னோவில் நடைபெறும் தேசிய ஜூடோ போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
சாதனை மாணவரை பள்ளி சேர்மன் ராஜாங்கம் பாராட்டி தங்க நாணயம் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் செயல் தலைவர் ஜெகதீஷ், துணை தலைவர் அசோக் குமார், முதல்வர் ஆனந்த வள்ளி பங்கேற்றனர். பயிற்சியளித்த ஜூடோ ஆசிரியர் பாலா கவுரவிக்கப்பட்டார்.