/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இன்று பள்ளிகள் திறப்பு: பஸ் ஸ்டாண்ட்டில் குவிந்த பயணிகள்
/
இன்று பள்ளிகள் திறப்பு: பஸ் ஸ்டாண்ட்டில் குவிந்த பயணிகள்
இன்று பள்ளிகள் திறப்பு: பஸ் ஸ்டாண்ட்டில் குவிந்த பயணிகள்
இன்று பள்ளிகள் திறப்பு: பஸ் ஸ்டாண்ட்டில் குவிந்த பயணிகள்
ADDED : ஜன 05, 2026 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. இதனால் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தேனி மாவட்டத்தை சேர்ந்த பலரும் வேலை, தொழில் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இதனால் பலரும் விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு வந்தனர்.
விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. இதனால் தேனி பஸ் ஸ்டாண்டில் காலை முதல் குவிந்தனர்.
பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. ரயில்வே ஸ்டேசனிலும் அதிக அளவிலான பயணிகள் காத்திருந்தனர்.