ADDED : மார் 02, 2026 05:09 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் டிரயம்ப் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது. பெரியகுளம் பி.இ.ஓ., ராஜமுருகன் கண்காட்சியை துவக்கி வைத்தார்.
தலைமையாசிரியர் ராம்சங்கர் முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாண்டியராஜ், ஆசிரியர் பயிற்றுநர் முருகேசன், ஆசிரியர்கள் பங்கேற்றனர். சந்திராயன், ரோபோட், பிளமிங்விதி நீர் மின்சாரம், புவிவெப்பமயமாதல், வெப்ப மின்னிரட்டை உள்ளிட்ட மாதிரிகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். மாணவர்கள், பெற்றோர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். ஆசிரியர் அழகர்ராஜா, சபிதா ஒருங்கிணைத்தனர். ஆசிரியை சுமதி நன்றி கூறினார்.
