UPDATED : ஆக 05, 2026 08:55 PM
ADDED : ஆக 05, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
தேனி:முத்துதேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை உறவின்முறைத்தலைவர் தர்மராஜன் துவக்கி வைத்தார்.
துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உருவபடத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.மாணவர்கள் தங்கள் அறிவியல் படைப்புகளை காட்சி படுத்தினர். பள்ளி செயலாளர் அருண்குமார், இணைச்செயலாளர் விக்னேஷ்பிரபு, பள்ளி முதல்வர் சுபா ஈஸ்வரி ஆகியோர் மாணவர்களை பாராட்டினர்.
