
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி டைமன் வித்யாலயா பள்ளியில் 'விக்சித் பாரத் 2047 என்ற தலைப்பில் மாணவர்கள் சார்பில் கண்காட்சி நடந்தது.
பள்ளி தாளாளர் பாண்டிச்செல்வம் துவக்கி வைத்தார். பச்சையப்பா பள்ளி நிர்வாகி லட்சுமிவாசன், பள்ளி மேலாண்மை இயக்குனர் கபில், பள்ளியின் கல்வி இயக்குனர் ஸ்ரீ வாகினி, தலைமை ஆசிரியை ஹேமலதா, உதவி தலைமை ஆசிரியை அருணாமுருகேஸ்வரி ஆகியோர் பங்கேற்று மாணவர்களை உற்சாகப்படுத்தினர். தூய்மையான இந்தியா 2047, ஆரோக்கிய மேம்பாடு, கல்வித்துறையின் மாற்றம், ஏ.ஐ.தொழில் நுட்ப வளர்ச்சி ஸ்மார்ட் இந்தியா ஆகிய தலைப்புகளில் மாதிரிகள் காட்சிப்படுத்தினர்.

