ADDED : பிப் 28, 2026 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமையாசிரியர் மரியசிங்கம் தலைமை வகித்தார்.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கண் காட்சியில் தங்கள் படைப்புகளாக வளிமண்டல அழுத்தம், ஒளி விலகல், அதிர்வு மூலம் ஒலி உண்டாதல், சுத்தமான தேனை கண்டறிதல், மாசுபட்ட நீரை தூய நீராக வடிகட்டுதல், செயற்கை கோள், ராக்கெட், உயிரியல் பூங்கா, சூரிய குடும்பம் உள்ளிட்ட படைப்புகள் குறித்த சோதனைகளை செய்து காண்பித்து, விளக்கங்களை மாணவர்கள் எடுத்து கூறினர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

