UPDATED : அக் 08, 2026 04:49 PM
ADDED : அக் 08, 2026 04:16 PM
போடி: தபால் துறை சார்பில் 'தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா' திட்டத்தின் கீழ் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் நடந்தது.
தபால் தலை சேகரிக்கும் சேகரிக்கும் பழக்கத்தை 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் ஊக்குவிக்கவும், எண்ணிக்கையை அதிகப்படுத்திட 'தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா' திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் மூலம் மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு ஆண்டு தோறும் நடைபெறும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதனை ஒட்டி நேற்று போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் தபால் துறை சார்பில் உதவி அலுவலர்கள் சூர்யா, ஆர்த்தி மேற்பார்வையில்20 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வில் நடப்பு நிகழ்வுகள், சமூக அறிவியல், விளையாட்டு, கலாச்சாரம், அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த வினாக்கள் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டு இருந்தன. ஏற்பாடுகளை பள்ளி தலைமை யாசிரியர் மரியசிங்கம் செய்திருந்தார்.
