நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு, போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் சர்க்கரை, உப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் மரியசிங்கம் தலைமை வகித்தார். தற்போது பெரும்பாலான குழந்தைகளும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
இதனை தவிர்க்க உணவில் சர்க்கரை, உப்பு, எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். ஐஸ் கிரீம், பீஸா, பர்கர், நூடுல்ஸ், குக்கீஸ் போன்ற துரித உணவுகளை தவிர்ப்பதன் மூலம் மாணவர்கள் உடல் ஆரோக்கியம், நோயின்றி நீண்ட காலம் வாழலாம் என ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கி கூறினார்.