நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தேனி மேரிமாதா சி.பி.எஸ்.சி., பள்ளியில் 'தலைமுறைகளுக்கு இடையிலான பிணைப்பு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. சமூக நல அலுவலர் சியாமளாதேவி தலைமை வகித்தார். மகளிர் அதிகார மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாருமதி வரவேற்றார்.
பயிற்சியாளர்கள் ரவிச்சந்திரன், சுமதி, பள்ளி முதல்வர் ராபின்ஸ் ஜேக்கப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மரியாதை அளித்தல், முதியோர்களை பாதுகாப்பதின் அவசியம் உள்ளிட்டவை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

