தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஓட்டளிக்க தனி வரிசை வசதி

 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஓட்டளிக்க தனி வரிசை வசதி

 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஓட்டளிக்க தனி வரிசை வசதி


ADDED : மார் 15, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: சட்டசபை தேர்தலின்போது மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க வசதியாகஓட்டச்சாவடிகளில் சாய்வுதளம், தனி வரிசை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் கூறினார்.

கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்புக் குழுக்கூட்டம்நடந்தது.

முதன்மை கல்வி அலுவலர் நாகேந்திரன், மாவட்ட சமூகநல அலுவலர் விஷ்ணு பிரியா,மாற்றுத்திறனாளி பிரதிநிதி அழகேசன், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட தேர்தல் அலுவலர் பேசுகையில், 'நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அனைத்து வாக்காளர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் ஓட்டளிக்க செய்வதே முக்கியநோக்கமாகும்.

மாவட்டத்தில் உள்ள 1394 ஓட்டுச்சாவடி மையங்களை உள்ளடக்கிய 592 ஓட்டுச்சாவடி அமைவிடங்களில் சக்கர நாற்காலியில் சென்று ஓட்டளிக்க வசதியாக சாய்வுதளம் அமைத்தல், மாற்றுத்திறனாளிவாக்காளர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்த வேண்டும்.

பார்வைத்திறன் குறைபாடு உள்ள வாக்காளர்களுக்குபிரெய்லி வசதி கொண்ட தபால் ஓட்டு சீட்டுகள் வழங்கவும், கேட்கும் திறன்குறைபாடு உள்ள வாக்காளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில்தன்னார்வலர்கள் நியமிக்கப்பட வேண்டும்,' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us