ADDED : ஆக 21, 2026 12:22 AM

போடி: போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் 'என் பட்டு என் பெருமை 2.0 திட்டத்தின் கீழ் மத்திய பட்டு வாரியம் மூலம் பட்டுப் புழு வளர்ப்பு தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கான கருத்தரங்கம் நடந்தது. பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் நிஷா தலைமை வகித்தார். மத்திய பட்டு வாரிய முன்னாள் விஞ்ஞானி ராஜாராம், சமயநல்லூர் மத்திய பட்டு வாரிய ஆராய்ச்சி விரிவாக்க மைய விஞ்ஞானிகள் மகிமா சாந்தி, லோகித் தாஷ்வா முன்னிலை வகித்தனர். அக்ரி அமிகோஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் டேனியல் ஜெபராஜ் வரவேற்றார்.
பட்டுப்புழு வளர்ப்பில் நவீன தொழில் நுட்பம், அறிவியல் சார்ந்த உற்பத்தி முறைகள், நோய் மேலாண்மை, தொழில் நுட்ப பரிமாற்றம், சுகாதாரம், தரமான முட்டைகள், ஆரோக்கியமான புழுக்களை தேர்ந்தெடுத்தல், தேவை யான வெப்பநிலை, ஈரப்பதம், காற்றோட்டம், பட்டு வளர்ப்பு மூலம் கிடைக்கும் வருமானம் குறித்து விவசாயிகளுக்கு அதிகாரிகள் எடுத்து கூறினர். பட்டுபுழு வளர்ப்பு விவசாயிகள் பங்கேற்றனர்.
