/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'சர்வர் ' பிரச்னையால் ரேஷன் பொருட்கள் வினியோகம் பாதிப்பு
/
'சர்வர் ' பிரச்னையால் ரேஷன் பொருட்கள் வினியோகம் பாதிப்பு
'சர்வர் ' பிரச்னையால் ரேஷன் பொருட்கள் வினியோகம் பாதிப்பு
'சர்வர் ' பிரச்னையால் ரேஷன் பொருட்கள் வினியோகம் பாதிப்பு
ADDED : ஆக 29, 2025 03:42 AM
தேனி: உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் சில நாட்களாக சர்வர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்கள் வினியோகம் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடை பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
உத்தமபாளையத்தில் 165க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்குகின்றன. கடைகளில் ரேஷன் கார்டுகள் பி.ஓ.எஸ்., (விற்பனை முனையம்) கருவிகளில் பதிவு செய்து பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால், உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் கடந்த ஆக., 23 முதல் சர்வர் பிரச்னையால் ரேஷன் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால் 'சர்வர் அப்டேட்' செய்யப்படுகிறது என்கின்றனர். இந்த நிலை கடந்த 4 நாட்களாக நீடிக்கிறது. இதனை பொதுமக்களிடம் கூறினாலும் ஏற்றுக்கொள்ளாமல் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதே சமயம் மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி பகுதிகளில் ரேஷன்கடைகளில் சர்வர் பாதிப்பின்றி பொருட்கள் வழங்கப்படுகிறது.