/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முறையான சாக்கடை வசதி இன்றி தெருவில் தேங்கும் கழிவுநீர்: பெரியகுளம் நகராட்சி செயின்ட் சேவியர் தெருவில் அடிப்படை வசதியின்றி தவிப்பு
/
முறையான சாக்கடை வசதி இன்றி தெருவில் தேங்கும் கழிவுநீர்: பெரியகுளம் நகராட்சி செயின்ட் சேவியர் தெருவில் அடிப்படை வசதியின்றி தவிப்பு
முறையான சாக்கடை வசதி இன்றி தெருவில் தேங்கும் கழிவுநீர்: பெரியகுளம் நகராட்சி செயின்ட் சேவியர் தெருவில் அடிப்படை வசதியின்றி தவிப்பு
முறையான சாக்கடை வசதி இன்றி தெருவில் தேங்கும் கழிவுநீர்: பெரியகுளம் நகராட்சி செயின்ட் சேவியர் தெருவில் அடிப்படை வசதியின்றி தவிப்பு
ADDED : நவ 08, 2025 01:37 AM

பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி தென்கரை 15 வது வார்டு செயின்ட் சேவியர் தெருவில் அடிப்படை வசதிகள் இன்றி அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்த வார்டில் நூற்றுக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். விவசாய தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகமானோர் வசிக்கும் பகுதி யாகும்.
ஆனால் இப்பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இப்பகுதியில் கழிவுநீர் செல்ல சாக்கடை கட்டாததால் கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் தேங்குகிறது.
கொசுக்கடி தொந்தரவால் பலரும் துாக்கத்தை இழந்து தவிக்கின்றனர். சுகாதாரக்கேடினால் பொதுமக்கள் அடிக்கடி காய்ச்சல் பாதிப்பிற்குள்ளாகி அவதிப்படுகின்றனர்.
கொசு உற்பத்தியை தடுக்க குறைந்த பட்சம் கொசு மருந்து கூட நகராட்சி தெளிப்பதில்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
அச்சத்துடன் வசி க்கு ம் அவலம் துரை முருகன், செயின்ட்சேவியர் தெரு, பெரியகுளம்: தெருக்களில் இரு புறமும் முறையான சாக்கடை வசதி இல்லை. ஒவ்வொரு ஆண்டும் நகராட்சி சாக்கடை கட்டுவதற்கு அளவீடு செய்து செல்வார்கள். ஆனால் பணி நடைபெறுவது இல்லை.
இது வரை மூன்று முறை சாக்கடை கட்ட அளவு எடுத்ததோடு சரி. எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் வீட்டின் அருகே கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு நிலவுகிறது.
குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி பாம்பு நடமாட்டம் உள்ளது. குடியிருப்போர் இணைந்து பாம்பு பிடித்து வெளியேற்றும் அவலநிலை தொடர்கிறது. இதனால் ஒவ்வொரு இரவிலும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் வசிக்கிறோம்.
தெருக்களில் சுகாதாரக்கேடு அதிகம் உள்ளதால் குழந்தைகளை தெருவில் இறக்கிவிடுவதில்லை.
சேதமடைந்த சிமென்ட் கற்கள் அன்னகாமு: இத்தெருவில் 2005 ல் நகராட்சியில் பதிக்கப்பட்ட சிமென்ட் கற்கள் சீராக இல்லாமல் ஏற்றம், இறக்கமாக உள்ளது.
மழைநீர் செல்ல வழியில்லாமல் வீடுகளுக்கு முன் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.
தெருவில் பேவர் பிளாக் கற்கள் முறையாக பதிக்காமல் முதியோர் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. பேவர் பிளாக் கற்கள் முறையாக பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுக்குழாய் தேவை தெய்வா: மக்கள் தொகைக்கு ஏற்ப இந்தப்பகுதியில் தெருக்குழாய்கள் இல்லை. இதனால் வெகுதூரம் சென்று குடிநீர் கொண்டு வரும் நிலை உள்ளது.
தெருவிலிருந்து மெயின்ரோடு பட்டாளம்மன் கோயில் தெருவில் ரோடு அமைக்காமல் குண்டும் குழியுமாக உள்ளது. போதுமான தெரு விளக்கு வசதி வசதி செய்திட வேண்டும்.

