தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ சாக்கடையால் சுகாதாரக்கேடு

 சாக்கடையால் சுகாதாரக்கேடு

 சாக்கடையால் சுகாதாரக்கேடு


ADDED : மே 24, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 03:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னமனூர்: சின்னமனூரில் சீப்பாலக்கோட்டை ரோட்டில் சாக்கடை சுத்தம் செய்யாததால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. சின்னமனூர் நகராட்சியில் வீதிகள் தோறும் சேகரமாகும் குப்பை குவியல்கள் அப்புறப் படுத்தாமல் உள்ளனர். ஆண்டிற்கு ஒருமுறை சாக்கடை சுத்தம் செய்யும் நிலை உள்ளது. திடக்கழிவு மேலாண்மை செயல்பாடு இன்றி உள்ளது. அதனால் குப்பை பிரித்து வாங்குவது இல்லை.மெயின்ரோட்டில் வி.ஏ.ஓ. அலுவலகம் முதல் காந்தி சிலை வரை ரோட்டிற்கு கிழக்கு பக்கம் தோண்டிய சாக்கடையை அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர்.

தற்போது சீப்பாலக்கோட்டை ரோட்டில் வடக்கு மற்றும் தெற்கு பகுதி சாக்கடைகள் மீது கடைகள் கட்டி அமர்ந்துள்ளனர். சாக்கடை சுத்தம் செய்து 20 ஆண்டுகளாகும் என்கின்றனர்.கமிஷனர், துப்புரவு ஆய்வாளர் தங்களின் பணிகளை பார்க்காமல் மெத்தனமாக உள்ளனர்.

சீப்பாலக்கோட்டை ரோட்டில் துர்நாற்றம் வீசுகிறது. சாக்கடையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us