UPDATED : ஆக 10, 2026 04:37 PM
ADDED : ஆக 10, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கான குறுவட்ட விளையாட்டு போட்டி சண்முகசுந்தரபுரம் அரசு பள்ளி சார்பில் நடந்து வருகிறது.
இதில் டேக் வாண்டோ, ஜூடோ, பாக்சிங் பிரிவுகளுக்கான போட்டிகள் கன்னியப்பபிள்ளைபட்டி அமச்சூர் கிக் பாக்சிங் பயிற்சி மையத்தில் நடந்தது. போட்டிகளை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெத்தணசாமி துவக்கி வைத்தார். 12 அரசு மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சார்பில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
