ADDED : ஜூன் 03, 2026 11:08 PM
அ நிறம் | அளவு
தேனி: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி ஸ்டேஷனில் எஸ்.ஐ.,ஆக இருந்தவர் ராமபாண்டியன் 36. இவர் தேனி மாவட்டம் அல்லிநகரம் ஸ்டேஷனுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பணியில் இன்னும் சேரவில்லை. சில தினங்களுக்கு முன் ஆண்டிபட்டி அருகே சிலரிடம் தகராறில் ஈடுபட்டார். இவர் மீது ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.
இந்நிலையில் எஸ்.ஐ., ராமபாண்டியனை சஸ்பெண்ட் செய்து திண்டுக்கல் டி.ஐ.ஜி., சசி மோகன் உத்தரவிட்டுள்ளார்.
