ADDED : பிப் 11, 2026 07:03 AM
அ நிறம் | அளவு
மூணாறு: மூணாறு அருகே லெட்சுமி எஸ்டேட்டை சேர்ந்த விஜயகுமார், ராஜன் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த விஜயகுமாரின் மனைவி வினோ 44, வை ராஜன் அரிவாளால் வெட்டினார். தலையில் பலத்த காயம் அடைந்த வினோ மூணாறு டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரில் ராஜன் 49, அவரது மனைவி மகேஸ்வரி 46, மகள் ஆகியோர் மீது மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
