ADDED : நவ 29, 2025 05:32 AM
அ நிறம் | அளவு
கூடலுார்: சில நாட்களாக மழை, பனி, வெயில் என சீதோஷ்ண நிலை மாற்றம் இருந்ததால் பலரும் காய்ச்சல், சளி பிரச்னையால் அவதிப்பட்டனர்.
சித்த மருத்துவ முகாம் மருத்துவ அலுவலர் முருகானந்தன் தலைமையில், சித்தா டாக்டர் சிராஜுதீன் முன்னிலையில் நடந்தது. நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் பாக்கெட்டுகள், உடல் வலி போக்கும் பைரவ மாத்திரைகள், சாந்த சந்திரோதய மாத்திரைகள், கற்பூராதி தைலம், வாத கேசரி தைலம் வழங்கப்பட்டன. மருந்தாளுனர் பசும்பொன், சுகாதார ஆய்வாளர் பிரபு ராஜா கலந்து கொண்டனர்.
