UPDATED : ஜூன் 27, 2026 05:38 PM
ADDED : ஜூன் 27, 2026 03:50 PM
அ நிறம் | அளவு
கம்பம்:காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தா பிரிவு மூட்டு வலிக்கான சித்த மருந்து பெட்டகம் வழங்கும் நடந்தது. முகாமிற்கு மருத்துவ அலுவலர் அரவிந்த் தலைமை வகித்தார்.
முழங்கால் மூட்டு தேய்மானம், கழுத்து எலும்பு தேய்மானம் , இடுப்பு மூட்டுகள் தேய்மானம், முடக்குவாதம், வாத நீர், உப்பு வாத நீர் போன்றவைகள் பற்றி விளக்கி கூறப்பட்டது, பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் வரும் எலும்பு மெலிவு நோய், மூட்டுவலி வராமல் தடுப்பதற்கான உணவு முறைகள், நடைப்பயிற்சி பற்றியும் விளக்கி சித்தா டாக்டர் சிராசுதீன் பேசினார். முகாமில் மூட்டு வலிக்கான சித்த மருந்துகள் சிலாசித், அமுக்ரா, வல்லாரை மாத்திரைகள், உளுந்து, பிண்ட தைலங்கள் மருந்துகள் அடங்கிய பெட்டகம் வழங்கபட்டது.
