UPDATED : மே 15, 2026 06:58 PM
ADDED : மே 15, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
கூடலுார்:கூடலுார் அக்னி மார்சல் ஆர்ட்ஸ் அகாடமியின் சிலம்ப மாஸ்டர் பாலமுருகன். இவர் பல ஆண்டுகளாக சிலம்பம், கராத்தே, யோகா உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகிறார்.
பள்ளி விடுமுறை நாட்களில் அலைபேசியில் கூடுதல் நேரம் செலவிடும் மாணவர்கள் அதிகம். இவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெற்றோர்கள் உதவியுடன் மாணவர்களை ஒருங்கிணைத்து தினந்தோறும் காலையில் சிலம்பம், கராத்தே, யோகா பயிற்சியை அளித்து வருகிறார். சிறுவர்கள் அலைபேசி பயன்படுத்துவதால் ஏற்படும் விபரீதத்தை வலியுறுத்துவதுடன் அதனைப் பயன்படுத்தாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.
