ADDED : ஜன 08, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் உயர் கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி வளாகத்தில் நடந்த நடந்த இரண்டு நாள் கருத்தரங்கை கல்லூரி முதல்வர் மணிகண்டன் துவக்கி வைத்தார். வணிகவியல், கம்ப்யூட்டர் பயன்பாட்டியல் துறை தலைவர் சதுரகிரி வரவேற்றார். கருத்தரங்கில் அமர்வு தலைவர்களாக தமிழ் துறை விரிவுரையாளர்கள் முனைவர் அழகர்சாமி, முனைவர் ஜீனியராணி ஆகியோர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக மதுரைக்கல்லூரி இணைப்பேராசிரியர் ரத்தினக்குமார், எழுத்தாளர் அறிவுமணி, மதுரை காமராஜர் பல்கலை கல்லூரி உதவி பேராசிரியர்கள் ராமர், பழனிக்குமார் ஆகியோர் கருத்தரங்கில் பேசினர்.
