ADDED : மார் 16, 2024 06:24 AM

தேவாரம் : பா.ஜ., கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது கட்சியை இணைத்ததை முன்னிட்டு, தேவாரம் அருகே கோம்பையில் அக்கட்சியின் கொடி கம்பத்தில் நேற்று பா.ஜ., கொடி ஏற்றப்பட்டது.
தேவாரம் அருகே கோம்பையில் ச.ம.க., தேனி தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் செல்வேந்திரன், சின்னமனூர் ஒன்றிய செயலாளர் முத்து மகாராஜன், துணைச் செயலாளர் செல்வராஜ், இளைஞரணி செயலாளர் மதிகணேசன், பொருளாளர் சரவணகுமார், கம்பம் நகர செயலாளர் செல்வராமர், போடி ஒன்றிய செயலாளர் அருண் கிஷோர், இளைஞரணி செயலாளர் பரிமளச் செல்வன் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டியன் முன்னிலையில் இணைந்தனர். அதன்பின் அங்கு இருந்த ச.ம.க., கொடி கம்பத்தில் உள்ள கொடியை அகற்றி விட்டு பா.ஜ., கொடியை ஏற்றினர்.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ., மாவட்ட பொதுச் செயலாளர் தங்க பொன்ராஜ், உத்தமபாளையம் மேற்கு மண்டல தலைவர் காமராஜ், மாவட்ட மீனவர் அணி தலைவர் சிங்கராஜ், வர்த்தகர் பிரிவு அணி செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் அஜித் இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
