ADDED : பிப் 25, 2026 07:37 AM
அ நிறம் | அளவு
சின்னமனூர்: சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி காமாட்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சோனைமுத்து 52 , இவருக்கு இருமகள்கள், மணிகண்டன் 23, மகன் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்தது. மகன் மணிகண்டன், கேட்டரிங் டெக்னாலஜி படிப்பு படித்து வெளியூரில் வேலை பார்த்துள்ளார். ஓராண்டிற்கும் மேலாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். தினமும் மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம் என்கின்றனர்.
நேற்று காலை இங்குள்ள உடையகுளம் அருகே சோனைமுத்து சென்று கொண்டிருந்த போது, மணிகண்டன் தந்தையுடன் தகராறு செய்துள்ளார். பின்னர் தான் வைத்திருந்த பாட்டிலால் தலையில் அடித்ததில் பலத்த காயமடைந்து சோணைமுத்து அதே இடத்தில் பலியானார். ஓடைப்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி மணிகண்டன் கைது செய்து விசாரிக்கின்றனர்.
