ADDED : நவ 09, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பழனிசாமி 65. பொது இடத்தில் மதுபோதையில் தகராறு செய்துள்ளார். இவரை இவரது மகன் முத்துப்பாண்டி 35,கண்டித்துள்ளார். பழனிசாமியை வீட்டிற்கு அழைத்து சென்றார்.
வீட்டில் தனியாக இருந்த பழனிசாமி உடலில் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தேவதானப்பட்டி எஸ்.ஐ., ஜான் செல்லத்துரை விசாரணை செய்து வருகிறார்.
--

