/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விண்வெளி மையம் செயல்பாடு: பள்ளி மாணவர்கள் பார்வையிடல்
/
விண்வெளி மையம் செயல்பாடு: பள்ளி மாணவர்கள் பார்வையிடல்
விண்வெளி மையம் செயல்பாடு: பள்ளி மாணவர்கள் பார்வையிடல்
விண்வெளி மையம் செயல்பாடு: பள்ளி மாணவர்கள் பார்வையிடல்
UPDATED : டிச 18, 2025 09:15 AM
ADDED : டிச 18, 2025 06:02 AM

கம்பம்:
பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயல்பாடுகளை கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் நேரில் சென்று பார்த்தனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) தலைமையிடம் பெங்களுருவில் உள்ளது. சர்வதேச அளவில் உள்ள ஆறு பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் இதுவும் ஒன்றாகும்.
இங்கு தொலை தொடர்பு, இயற்கை பேரிடர் காலங்களில் உதவுதல், டெலிமெடிசன், சீதோஷ்ண நிலை மாற்றங்கள், தொலைதூர கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் உதவும் சாட்டிலைட்டுக்களை உருவாக்கி நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறது.
கம்பம் ராம் ஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் அறிவியல் பாடத்தில் சிறந்து விளங்கும் 50 மாணவ மாணவிகளை அழைத்து சென்று, விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயல்பாடுகளை விளக்கியும், எவ்வாறு சேட்டிலைட் உருவாக்கப்படுகிறது, அதை எவ்வாறு செலுத்துகின்றனர், அவர்கள் பயன்படுத்தும் நவீன உத்திகள் பற்றி நேரில் மாணவர்களுக்கு அங்கிருந்த அதிகாரிகள் விளக்கினார்கள்.
மாணவ மாணவிகளை பள்ளியின் முதுநிலை முதல்வர் சுவாதிகா, அறிவியல் ஆசிரியர்கள் பொன்ராம், ஜீவிதா ஆகியோர் அழைத்து சென்றனர்.

