/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை தாவரவியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு
/
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை தாவரவியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை தாவரவியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை தாவரவியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு
ADDED : டிச 22, 2025 06:17 AM

மூணாறு: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மூணாறில் கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்டச் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான தாவரவியல் பூங்கா உள்ளது. வெளி நாடுகளைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட வகை பூக்கள் உள்பட 1500 வகை வண்ணப் பூக்கள் உள்ளன. அவை காலநிலைக்கு ஏற்ப பூக்கும். தற்போது பால்ஸ், அஷிலியா, ரோஜா, சீனியா, இம்பேஷியன்ஸ், ஆர்க்கிடு, தாய்லாந்து நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட 50க்கும் மேற்பட்ட வகை ஆந்தோரியம் பூக்கள் உள்பட நுாற்றுக்கணக்கான வகை பூக்கள் பூத்துள்ளன.
ஏற்பாடு தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பகலில் வண்ணப் பூக்கள் பூங்காவை அலங்கரிக்கும் நிலையில் இரவில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இசைக்கு ஏற்ப நடனமாடும் நீரூற்று 'மியூசிக்கல் பவுண்டன்', 'டோம் தியேட்டர்' உள்பட பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன. தவிர டிச.24 முதல் ஜன.4 வரை இரவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை பூங்காவை ரசிக்கலாம். நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.100, சிறுவர்களுக்கு ரூ.50.

