ADDED : அக் 27, 2024 04:08 AM
அ நிறம் | அளவு
தேனி, : பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நாளை(அக்.28) நடக்கிறது.
முகாம் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
முகாமில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பின் போது கண்டறியப்பட்டவர்களுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, மருத்துவப் பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
முகாமிற்கு வருபவர்கள் புகைப்படம் 4, ரேஷன்கார்டு, ஆதார் நகல், வாக்காளர் அடையாள அட்டையுடன் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
