/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் துவங்கியது: படிவங்கள் வாங்க வாக்காளர்கள் ஆர்வம்

ADDED : நவ 05, 2025 12:46 AM

தேனி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நேற்று துவங்கின. வீடுகளுக்கு சென்ற பி.எல்.ஓ.,க்களிடம் வாக்காளர்கள் ஆர்வமாக படிவங்களை வாங்கினர்.
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தமிழகத்தில் நேற்று வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் துவங்கின.
மாவட்டத்தில் ஒவ்வொரு பி.எல்.ஓ.,க்களுக்கும் உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கான படிவங்களை வீடுகள் வாரியாக வழங்க துவங்கினர். ஒவ்வொரு வாக்காளருக்கும் புகைப்படத்துடன் கூடிய இரு படிவங்கள் வழங்கப்பட்டன.
படிவம் வழங்கும் போது அதற்கான பிரத்யேக செயலியில் படிவத்தில் இருந்த கியூ.ஆர்.,கோடினை ஸ்கேன் செய்து வழங்கியதாக பதிவேற்றம் செய்தனர்.
வீடுகளுக்கு பி.எல். ஓ.,க்கள் செல்லும் போது குடும்பத்தில் உள்ளவர்கள் விபரங்களை கூறி படிவங்களை வாக்காளர்கள் ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டனர்.
படிவங்கள் வழங்கும் பணியை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த னர்.