ADDED : செப் 15, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.16–
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்.,17 (நாளை) போடி– மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
போடியில் இருந்து காலை 11:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மதுரைக்கு மதியம் 12:45 மணிக்கும், கூடல் நகருக்கு 13.30 மணிக்கும் சென்றடையும். மறுமார்க்கத்தில் கூடல் நகரில் இருந்து மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 2:45 மணிக்கும், போடிக்கு மாலை 4:30 மணிக்கும் இந்த ரயில் வந்து சேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
