ADDED : ஜன 26, 2026 06:04 AM
தேனி: தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறையின் நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்களின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப்போட்டிகள் நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
உறவின்முறைத் தலைவர் தர்மராஜன் தலைமை வகித்தார். துணை தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கோபி வரவேற்றார். ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் விஜயகுமார் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தை பத்ரகாளியம்மன் கோயிலில் துவக்கி வைத்தார்.
உறுப்பினர் கார்த்திகேயன் மைதானத்தில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினார். உறுப்பினர் ராஜா போட்டிகளை துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம், உயரம், மும்முறை தாண்டுதல், கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. விளையாட்டுக்குழு உறுப்பினர் செந்தில் நாராயணன் நன்றி கூறினார்.

