ADDED : பிப் 11, 2026 06:59 AM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் மா மரங்கள் அதிகம் உள்ளன. தெப்பம்பட்டி, ஜி.உசிலம்பட்டி, கண்டமனூர் உள்பட பல பகுதிகளில் கல்லா, செந்தூரம், காசா வகை மா மரங்கள் அதிகம் உள்ளன. மாமரங்களில்
அதிக அளவு பூக்கள் பூத்து, பிஞ்சுகள் காய்த்துள்ளன. பூக்கள், பிஞ்சுகள் உதிர்வதை தடுக்க விவசாயிகள் அதற்கான மருந்து தெளிப்புடன் தேவையான உரமும் பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சில வாரங்களில் இப்பகுதியில் விளையும் மாங்காய் விற்பனைக்கு கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
