ADDED : அக் 04, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: பெரியகுளம் தாலுகா, ஜெயமங்கலம் ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி 40. இவரது மனைவி பாண்டிமீனா 35. இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இருவருக்குமிடையே கருத்து வேறுபாட்டால் மூன்று மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். மாரியம்மன் கோயில் திருவிழா நடக்க உள்ளதால், மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வரலாம் என பாண்டி சென்றார். பாண்டி மீனா அண்ணண் தங்கப்பாண்டியிடம் 45, இது குறித்து பேசினார்.
அப்போது பாண்டியை அவதூறாக பேசிய தங்கப்பாண்டி கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாண்டி அனுமதிக்கப்பட்டார். ஜெயமங்கலம் போலீசார் தங்கப்பாண்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.