ADDED : பிப் 01, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனியில் அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
மாநிலத்தலைவர் அமிர்தகுமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் பிரபு, சரவணக்குமரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் குபேந்திரசெல்வம் வரவேற்றார்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர்.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
