UPDATED : மே 08, 2026 08:36 PM
ADDED : மே 08, 2026 08:22 PM

அ நிறம் | அளவு
தேனி, மே 9-தேனி மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான கிக் பாக்சிங் போட்டி நடந்தது.
மாணவர்கள், மாணவிகள் பிரிவில் போட்டிகள் நடந்தது. தேனி, கோவை, திருவண்ணாமலை, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். போட்டிகள் மாவட்ட கிக்பாக்சிங் அசோசியேசன் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.
