/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில அளவிலான அவசர மருத்துவ பயிற்சி பட்டறை
/
மாநில அளவிலான அவசர மருத்துவ பயிற்சி பட்டறை
ADDED : டிச 16, 2025 06:03 AM
தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவசர மருத்துவ சங்கம் சார்பில் மாநில அளவிலான இருநாள் உயர்தர அவசர மருத்துவப் பயிற்சி பட்டறை நடந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களைச் சேர்ந்த அவசர மருத்துவப் பேராசிரியர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், இளநிலை மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் பணியாளர்கள் பங்கேற்றனர்.
பயிற்சி பட்டறையில் பாயின்ட் ஆப் கேர் அல்ட்ரா சவுண்ட் பயிற்சி, பாஸ்ட், இபாஸ்ட், ரஸ் நெறிமுறைகள், நுரையீரல், இதய அலட்ரா சவுண்ட் வழிநடத்தும் நரம்பு அணுகல் உள்ளிட்டவை, அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேஷன் மேலாண்மை, மெக்கானிக்கல் வென்டிலேஷன் முறைகள், என்.ஐ.வி., எச்.எப்.என்.சி., உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. கருத்தரங்கம், நேரடி செயல் விளக்கம், பயிற்சி பட்டறையை மருத்துவக் கல்லுாரி அவசர மருத்துவப் பிரிவு துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் டாக்டர்கள் ராஜகுமார், வி.கே.சதீஷ்குமார், செல்வ விக்னேஷ்வர், எம்.சதீஷ்குமார் ஒருங்கிணைத்தனர்.

