ADDED : பிப் 14, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுாரில் தி.மு.க. சார்பில் மாநில கபடி போட்டி மாநில தீர்மானக் குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ., மகாராஜன் முன்னிலையில், எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. பகல் இரவு ஆட்டமாக நடந்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு கேடயம் வழங்கப்பட்டது. முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தி.மு.க. நகர செயலாளர் லோகந்துரை, மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாண்டியன், நகர இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
