UPDATED : ஆக 26, 2026 05:25 PM
ADDED : ஆக 26, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
தேனி:மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், இயந்திரங்களுக்கு ஒருமணிநேர வாடகை ரூ. 1500 வழங்க வேண்டும்,டிரைவர்களுக்கு படி ரூ.800 வழங்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி 3 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று துவக்கினர். தேனியில் கருவேல் நாயக்கன்பட்டி, போடி ரெங்கநாதபுரத்தில் மண் அள்ளும் இயந்திரங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
மாவட்ட தலைவர் ராஜேஷ், துணைத்தலைவர் பாலு கூறுகையில், டீசல் விலை உயர்வால் செலவுகள், பராமரிப்பு அதிகரித்துள்ளது. இதனால் வாடகையை உயர்த்தி உள்ளதை தெரியபடுத்தவும், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் இந்த கோரிக்கையை ஏற்க வலியுறுத்தியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுளோம். என்றனர்.
