ADDED : ஜன 31, 2026 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் கல்லூரி மாணவிகள் தமயந்தி, சுருதிகா , ஸ்ரீ நிதி, பிர்னாஸ் பர்வீன், அன்பு மொழி, மதுரஞ்சனா, ஷர்மிளா ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் கம்பம் பகுதியில் தங்கி விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்களை வழங்கி வருகின்றனர். காமயகவுண்டன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் விவசாயிகள், மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம், மண்புழு உரம் தயாரித்தல், பயன்பாடு பற்றி விளக்கம் அளித்தனர்.
விளக்க கண்காட்சி நடத்தினர். விவசாயிகள் நவீன தொழில்நுட்பம் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு, அதற்கான விளக்கத்தை பெற்றனர்.

