ADDED : ஜன 18, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பதினேழு வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் 'போக்சோ 'வில் கைது செய்தனர்.
மூணாறு அருகே மாங்குளம் ஊராட்சியில் ஆனகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயேஷ் 29. இவர் 17 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.
வயிறு வலி என சிகிச்சை பெற மாணவி மருத்துவமனைக்குச் சென்றபோது டாக்டர்கள் நடத்திய மருத்துவ பரிசோதனையில் பாலியல் பலாத்காரம் நடந்ததாக தெரிய வந்தது. மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு அளித்த தகவலின்படி மூணாறு போலீசார் ஜெயேஷை போக்சோவில் கைது செய்தனர்.