ADDED : மார் 08, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: கண்டமனூர் அருகே கணேசபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
கணேசபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மாலை அணிவித்து பூரணை கும்பம் மரியாதை செலுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். வெல்கம் அட்மிஷன் மூலம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகளை கவுரவப்படுத்தினர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கண்ணன், வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மாதவி, ஆசிரியர்கள் மயில்வாகனன், செங்குட்டுவன், பாண்டியம்மாள், அமுதா, கணேஸ்வரி உள்ளிட்ட பங்கேற்றனர்.

