நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் ரத்ததானம், பல் மருத்துவம், பெண்கள் மருத்துவம், புற்று நோயியல், தோல் நோய், முடி உதிர்தல் தொடர்பான மருத்துவ முகாம் கல்லூரி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, கல்லூரி முதல்வர் ரேணுகா முன்னிலை வகித்தனர்.
டாக்டர்கள் சுசி விஜய்ராஜ், நந்தினி, விக்னேஷ், பாரதி குழுவினர் மாணவிகளுக்கு பல்வேறு மருத்துவ ஆலோசனை வழங்கினர். அனைத்து துறையைச் சார்ந்த மாணவிகள் ரத்ததானம் செய்தனர். 40 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது.

