ADDED : பிப் 11, 2026 06:59 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம், காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி,ஆராய்ச்சி நிலையத்தின் நான்காம் ஆண்டு மாணவர்கள் ஆதவன், ஹரிஷ், மாதேஸ்வரன், ரமேஷ் கண்ணா, ஸ்ரீராம், விஷால் ஆகியோர், ஊரக வேளாண்மை அனுபவத்திட்டம் எனும் பாடத்திட்டத்தின் கீழ் பெரியகுளம் தாலுகா பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
தாமரைக்குளத்தில் 'ஊரகப் பங்கேற்பு மதிப்பீடாக' கிராம மக்களின் தேவை, வளங்களை கேட்டறிந்து அதை தெருவில் வரைபடமாக வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
