/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தமிழ் வாசிப்பு போட்டியில் மாணவர்கள் அசத்தல்
/
தமிழ் வாசிப்பு போட்டியில் மாணவர்கள் அசத்தல்
ADDED : பிப் 02, 2026 05:23 AM

தேனி: வீரபாண்டி சவுராஷ்டிரா கல்வியில் கல்லுாரியில் கல்லுாரி நிர்வாகம், ஆக்டிவ் லேர்னிங் பவுண்டேசன் இணைந்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு போட்டி நடத்தினர். இதில் 100 பள்ளிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை முன்னாள் துணை வேந்தரும், ஆக்டிவ் லேர்னிங் பவுண்டேசன் நிறுவனருமான கோகிலா தங்கசாமி தலைமை வகித்தார். கல்லுாரி குழும தலைவர் ஜவஹர்லால், செயலாளர் கலைவாணி, முதல்வர் பிரபு முன்னிலை வகித்தார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு முறையே ஆயிரம், 750, 500 ரொக்க பரிசு, பதக்கம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கல்லுாரி துணை முதல்வர் செல்வக்குமார் ஒருங்கிணைத்தார்.

