ADDED : ஏப் 10, 2025 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி ஆர்.வி.எஸ்., பத்மாவதி தோட்டக்கலை கல்லூரி நான்காம் ஆண்டு படிக்கும் மாணவிகள் ரஞ்சனி, ராகப்பிரியா, ரெனிட்டாஷாரன், ரோஷினி, செமிதா, ஷீபா, சுபானு ஸ்ரீ ஆகியோர் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜாஸ்மின் உதவியுடன் பெரியகுளம் ஒன்றியம், எண்டப்புளி கிராமத்தில் விவசாயிகளை சந்தித்து மண்புழு உரம் தயாரிக்கும் முறை, அதன் பயன்கள் குறித்து விளக்கினர்.
இதே கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் பெரியகுளம் ஒன்றியம் ,லட்சுமிபுரத்தில் மா இலைகளை தாக்கும் கரு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த மைதா மாவு கரைசலை பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் இளமதி, ஜெனிபா, ஜெய் ஸ்ரீ, ஜோஸ்பின் ஜெஸிந்தா, கிருபா, கிருபாவதி ஆகியோர் விளக்கினர்.--

